விடுதலைப் புலிகள் சார்பில் பேச வல்லவரா கஜேந்திரன்?
ltte
Suresh Premachandran
s.gajendran
By Vanan
தமிழீழ விடுதலைப் புலிகள், தமது கொள்கையில் சமரசம் செய்தார்கள் என தான் கூறியதாக தமிழ் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் முன்வைத்த குற்றச்சாட்டை ஈ.பி.ஆர்.எல் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ( Suresh Premachandran)நிராகரித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது, தமிழீழ விடுதலை புலிகள் சார்பில் பேச வல்ல தகுதி செல்வராசா கஜேந்திரனுக்கு உள்ளதா? என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்களும் என்ற தொனிப்பொருளில் தமிழ் தேசிய முன்னணி அல்லாத ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் நாளை நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
