இலங்கையில் மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் உத்தரவு!
curfew
corona
sri lanka
By Shalini
இலங்கையில் காலி மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி காலி மாவட்டத்தின் ரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இம்புல்கொட மற்றும் கட்டுதம்பே ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று (26) இரவு 8 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னதாக கம்பஹா, திருகோணமலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலுள்ள சில பகுதிகளும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்