எட்டாவது நாளாகவும் தொடர்கிறது காலி முகத்திடலில் மக்களின் எழுச்சி!
protest
galle face
srilankan economic crisis
eighth day
By Kanna
கொழும்பு - காலி முகத்திடலில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று எட்டாவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கோரி அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் கடந்த வாரம் தொடக்கம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மழை வெயில் பாராது இளைஞசர்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து அந்த பகுதிக்கு "கோட்டாகோகம" என பெயர்சூட்டி இன்றுடன் எட்டாவது நாளாக போராடி வருகின்றனர்.
இதேவேளை, நாளுக்கு நாள் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.




மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி