காலி - மாத்தறை பிரதான வீதியில் விபத்து: வெளிநாட்டவர்கள் இருவர் பலி
Sri Lanka
Sri Lanka Police Investigation
Tourism
By Dhilak
காலி - மாத்தறை பிரதான வீதியின் மிதிகம பிரதேசத்தில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்த ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |