எரிபொருள் இருப்பு தொடர்பில் அமைச்சர் காமினி லொக்குகே
sri lanka
fuel
stock
Gamini Lokuge
By Thavathevan
நாட்டில் தற்போது போதியளவு டீசலும், பெற்றோலும் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (14) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டிற்கு முப்பத்து நான்காயிரம் மெற்றிக் தொன் கொள்ளவுடைய ஒரு கப்பல் தற்போது வந்துள்ளது. இதன்படி நாட்டுக்கு தேவையான எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் மின்நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளும் வழங்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் கொள்கலன் வாகனங்களுக்காக நிவாரண வேலைத்திட்டம் வகுக்கப்படும். எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி