கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புபட்ட கம்பஹா உஸ்மானுக்கு விளக்கமறியல்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற குழுவைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ'வின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் 'கம்பஹா உஸ்மான்' என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.பொதரகம இன்று (09) உத்தரவிட்டார்.
அதன்படி, இம்மாதம் 13ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில்ல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கொழும்பு குற்றப் பிரிவினால் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் 180 நாட்கள் தடுப்புக் காவல் மற்றும் விசாரணைக்குப் பின்னர், சந்தேக நபர் இன்று (09) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரின் பாதுகாப்பு
சந்தேக நபரின் தடுப்புக் காவல் உத்தரவுகள் நிறைவடைந்ததும் அவர் முன்னிலைப்படுத்தப்படுவதாகவும், கொலை தொடர்பில் அவரது ஈடுபாடு குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதால் அவரைக் காவலில் வைக்குமாறும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், சந்தேக நபரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சிறைச்சாலைகள் கண்காணிப்பாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |