அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள பகுதிகளில் எதிர்வரும் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
இதனால் அத்தனகலு ஓயாவை அண்மித்த மற்றும் அதன் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அறிவுறுத்தல்
பஸ்நாகொட நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் ஊடாக நீர் திறந்துவிடத் தொடங்கப்பட்டுள்ளதால், அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலை குறித்து அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதிகளிலுள்ள வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |