கணேமுல்ல சஞ்சீவ கொலையின் துப்பாக்கிதாரி : அம்பலமான மற்றுமொரு சம்பவம்
பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி மற்றுமொரு துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புற்றிருந்தமை தெரியவந்துள்ளது.
அதன்படி கடந்த 2024 டிசம்பர் 13 அன்று கந்தானையில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் வழிகாட்டலின் கீழ் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
[AUOOUMK ]
கொலையின் துப்பாக்கிதாரி
தற்போது, கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் துப்பாக்கிதாரியை கொழும்பு குற்றப்பிரிவு (CCD) 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரித்த பின்னர் இது தொடர்பில் தெரியவந்துள்ளது.
மேலும், நாட்டில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 1 மணி நேரம் முன்
