மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த கும்பல் : பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation
By Bavan Mar 30, 2026 10:10 AM GMT
Report

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த கும்பலின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சந்தேக நபர் கொழும்பில் வைத்து நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.

கடந்த 20ம் திகதி கொக்கட்டிச்சோலை - நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும் ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாகவும், இளம்தாயின் மகளான 3 வயது சிறுமி வயல்பகுதியில் உயிருடனும் மீட்கப்பட்டனர்.

அதிகரிக்கப்பட்டது மின்சாரக் கட்டணம்! ஏப்ரல் முதல் நடைமுறைக்கு

அதிகரிக்கப்பட்டது மின்சாரக் கட்டணம்! ஏப்ரல் முதல் நடைமுறைக்கு

சம்பவத்துடன் தொடர்புடைய பலர் கைது 

இச்சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண பிரதி காவல்துறைமா அதிபரின் வழிகாட்டலில் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் கிழக்கு மாகாண பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறை குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த கும்பல் : பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது | Gang That Kidnapped And Murdered Women In Batti

இதன்போது வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணும், 34 வயதுடைய அவரது கணவரும், 22 வயதுடைய கணவனின் தம்பி மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் உட்பட 5 பேரை 24 மணித்தியாலயத்தில் காவல்துறையினர் கைது செய்துடன் இரு முச்சக்கர வண்டிகள், கார், கோடரி மற்றும் கூரிய ஆயுதங்களை மீட்டனர்.

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம் கட்ட அகழ்வு பணி ஆரம்பம்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம் கட்ட அகழ்வு பணி ஆரம்பம்

 மயக்கமருந்துகள் மீட்பு

அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மயக்கமருந்துகளை மீட்டதுடன் முச்சக்கர வண்டி சாரதியையும் கைது செய்தனர்.

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த கும்பல் : பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது | Gang That Kidnapped And Murdered Women In Batti

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மயக்கமருந்து வழங்கிய மற்றும் குறித்த கும்பலை வழிநடத்திய பிரதான சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று (29) இரவு கொழும்பு வத்தளை பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வத்தளையைச் சேர்ந்த 49 வயதுடைய மருந்து முகவரான சிவா என்றழைக்கப்படும் திவாகரன் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வறட்சியான காலநிலை : நீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்

வறட்சியான காலநிலை : நீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026