மற்றுமொரு விலை அதிகரிப்புக்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ள நிறுவனங்கள்
price
increase
cylinder
gas company
By Sumithiran
சமையல் எரிவாயு விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயு விலை உயர்வு காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் கூறினார். சில வாரங்களுக்கு முன்பு லாஃப் காஸ் விலை உயர்த்தப்பட்டாலும், சந்தையில் லாஃப் எரிவாயு பற்றாக்குறை உள்ளது.
இருப்பினும், லிட்ரோவின் விலையில் உயர்வு ஏற்படுத்தப்படவில்லை. பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய எரிவாயு நிறுவனம் உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது என்று அமைச்சர் கூறினார்.
எரிவாயு விலை தொடர்பாக நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.