தொடர் வெடிப்புச் சம்பவங்கள்! அரச தலைவர் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல் (காணொளி)
People
Gotabaya Rajapaksa
Gas Cylinder
SriLanka
President Commission
By Chanakyan
இலங்கையில் நவம்பர் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் 430 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எரிவாயு சிலிண்டர் தீப்பற்றுகின்றமை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெடிப்பு குறித்து விசாரணை நடத்தித் தீர்வை பெற்றுக்கொடுக்கும் அரச தலைவர் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நாடு முழுவதும் 458 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் ஒரு வார காலத்தில் மாத்திரம் 430 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்