வெளிநாடொன்றில் எரிவாயு வெடித்ததில் தரைமட்டமாகிய வீடு
United Kingdom
Fire
World
By Laksi
பிரித்தானியாவில் ( United Kingdom) எரிவாயு வெடித்ததில் வீடு ஒன்று முற்றிலும் தரைமட்டமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவமானது மிடில்ஸ்ப்ரோவில் (Middlesbrough) உள்ள கர்க்லாண்ட் வாக் பகுதியில் (Kirkland Walk) நேற்று (18) மதியம் இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பில் சிக்கி 57 வயதான ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதி
இதனையடுத்து அப்பகுதி மக்கள் குறித்த நபரை இடிபாடுகளில் இருந்து மீட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்தநிலையில், வெடிப்பு காரணமாக கர்க்லாண்ட் வாக் மற்றும் சுற்றியுள்ள தெருக்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்து நடந்த பகுதிக்கு அருகில் வசிப்பவர் ஒருவர், மூன்று இளைஞர்களின் துணிச்சலுடன் காயமடைந்த நபரை இடிபாடுகளில் இருந்து மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்