எரிவாயு ஏற்றும் பாரவூர்திகளுக்கும் தீ வைப்பு - கேகாலையில் சம்பவம்
Sri Lanka Police
Kegalle
SL Protest
Sri Lanka Violence 2022
By Vanan
கேகாலை - மாவனெல்லை பகுதியில் லிட்ரோ எரிவாயு ஏற்றிச்செல்லும் 3 பாரவூர்திகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு எரிவாயு ஏற்றிச்செல்லும் 3 பாரவூர்திகள் நிறுத்தப்படும் முற்றத்திற்கும் அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்துள்ளனர்.
குறித்த எரிவாயு ஏற்றிச்செல்லும் 3 பாரவூர்திகள் மஹீபால ஹேரத் என்பவருக்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது. அங்கிருந்த எரிவாயு சிலிண்டர்களும் அடையாளம் தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாவனெல்லை தீயணைப்பு பிரிவின் வாகனங்கள் மற்றும் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் கனக ஹேரத்தின் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்