லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் திருத்தம்!
Litro Gas
LAUGFS Gas PLC
Litro Gas Price
Laugfs Gas Price
By Dharu
லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அந்நிறுவனத்தின் முகாமையாளர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபா அளவில் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு

நாளை (04) நள்ளிரவு முதல் குறித்த விலை திருத்தம் நடைமுறைப்படுத்தபடும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 3,638 ரூபா என்பது குறிப்பிடத்தக்ககது.
மேலும் விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினம் விடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி