கனடாவில் அதிகரிக்கும் பெட்ரோலின் விலை
Canada
World
By Beulah
கனடாவின் ரொறன்ரோவில் புத்தாண்டில் பெட்ரோலின் விலை உயரும் எனவும், இந்த விலை உயர்வு தற்காலிகமானது என துறைசார் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, அரசாங்கத்தின் கார்பன் வரி அதிகரிப்பிற்கு நிகராக ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 2.5 முதல் 2.6 சதவீதம் வரையில் உயர்வடையும் என குறிப்பிட்டுள்ளது.
மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
அத்துடன், ரொறன்ரோ மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச கற்கைக்கான பிரதானி மைக்கல் மான்ஜுரிஸ், இந்த விலை அதிகரிப்பானது உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியின் காரணமாக சமனிலை அடையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உலகளாவிய ரீதியில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையினால் விலைகளில் மாற்றம் ஏற்படும் சாத்தியங்களை மறுக்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி