காசாவில் மற்றுமொரு ஊடகவியலாளரை கொன்றது இஸ்ரேல்
மத்திய காசாவில் உள்ள புரைஜ் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அல் ஜசீரா ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர் அகமது விஷா(25)கொல்லப்பட்டார்.
உலகில் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ள காசாவில், இஸ்ரேலால் கொல்லப்பட்ட 12வது அல் ஜசீரா பத்திரிகையாளர் இவராவார்.
260 பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் படுகொலை
தோஹாவைத் தளமாகக் கொண்ட அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய அவரது சகோதரர் முகமது பயணித்த கார் மீது இஸ்ரேல் திட்டமிட்டு நடத்திய ஷெல் தாக்குதலில் அவர் கொல்லப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, 25 வயதான விஷா நேற்று(20)சனிக்கிழமை கொல்லப்பட்டார்.
Al Jazeera Media Network condemns the killing of Al Jazeera Mubasher cameraman Ahmed Washah in an Israeli strike on Al-Bureij camp in central Gaza, calling for accountability and protection for journalists.
— Al Jazeera English (@AJEnglish) June 20, 2026
🔴 Read full statement: https://t.co/bP36l50Fpr pic.twitter.com/umo1X2fSJg
பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழுவின் கூற்றுப்படி, ஒக்டோபர் 2023-ல் இஸ்ரேல் போரைத் தொடங்கியதிலிருந்து குறைந்தது 260 பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |