தமிழ் மக்களின் காணி தொடர்பிலான வர்த்தமானி : சபையில் சிறீதரன் எம்.பி அதிரடி
வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் காணிகளை உரிமைகோரா விட்டால் அரச காணிகளாக மாற்றுவது தொடர்பில் வெளியான வர்த்தமானி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (08) நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் நிலங்களை சுவீகரிப்பதற்காக கடந்த மார்ச் 28 ஆம் திகதி 2430 ஆம் இலக்க வர்ததமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதை கமத்தொழில் கால்நடை வழங்கல் காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் அறிவாரா ?
மேற்குறிப்பிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் என்ன தேவைக்காக கோரப்பட்டுள்ளன என்பதையும் 5700 ஏக்கர் காணிகளை அவசரமாக சுவீகரிப்பதற்கான காரணம் என்ன என்பதனையும் அமைச்சர் சபைக்கு அறிவிப்பாரா ?
வடக்கு மற்றும் கிழக்கில் நீண்டகாலம் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடமில்லாமல் மக்கள் வெளிநாட்டிலும் மற்றும் உள்நாட்டிலும் வாழும் போது அவர்களது காணிகளை விடுவிக்காமல் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் இந்த வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதை அமைச்சர் அறிவிப்பாரா ?
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நீண்டகார யுத்தம் காரணமாக அவர்களது காணி ஆவணங்கள் தவற விடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலங்கள் தெரிவிக்கும் நிலையில், இந்த புதிய வர்த்தமானி ஊடாக காணி உரிமையை உறுதிப்படுத்துமாறு எவ்வாறு கோர முடியும் என்பதை அமைச்சர் சபைக்கு அறிவிப்பாரா ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
