சாதாரண தரப் பரீட்சை முறைகேடுகள் தொடர்பில் ஆசிரியர் கைது
க.பொ.த சாதாரண தர பரீட்சை (G.C.E. (O/L) examination ) ஆங்கில வினாத்தாளை வெளியிட்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆசிரியர் இன்று (12.5.2024) கண்டியில் (kandy) வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காவல்துறையினரால் விசாரணை
ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் குழுக்களில் வெளியிட்டதாக கூறப்பட்டு குறித்த தனியார் வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக் கைது நடவடிக்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இடம்பெற்றுள்ளது.
இதேபோல் கொழும்பு ஹசலக்கவிலுள்ள ஆங்கில தனியார் கல்வி நிலையத்தின் ஆசிரியர் மற்றும் அவரது தாயாரின் கையடக்க தொலைபேசிகள் அண்மையில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் (சா/த) பரீட்சையின் போது கண்டுபிடிக்கப்பட்ட பல முறைகேடுகள் தொடர்பில் காவல்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகினறமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |