சாதனை படைத்த யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி -100 வீத பெறுபேறுகள்
2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் (GCE O/L) நேற்று அதிகாலை வெளியாகின.
வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் யாழ்.வேம்படி மகளிர் (Vembadi Girls’ High School ) உயர்தரப் பாடசாலை முதலிடத்தை பிடித்துள்ளது.
அந்தப் பாடசாலையில் இருந்து 120 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளார். இதனடிப்படையில் குறித்த பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 265 மாணவர்களுள் 181 மாணவர்கள் அதி சிறந்த சித்திகளைப் பெற்றுள்ளார்.
அதி சிறந்த பெறுபேறு
இவர்களுள் 120 மாணவர்கள் 9 ஏ சித்திகளையூம் 36 மாணவர்கள் 8 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். மேலும் 25 மாணவர்கள் 7 ஏ சித்திகளையும் பெற்றுள்ளதோடு தோற்றிய அனைத்து மாணவர்களும் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை யாழ். இந்துக் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய மாண வர்களுள் 82 பேர் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 73 மாணவர்கள் 8 ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.
33 மாணவர்கள் 7ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 24 மாணவர்கள் 6ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
20 மாணவர்கள் 5ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 345 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் அவர்களுள் 342 பேர் சித்தியடைந்துள்ளதுடன் 232 மாணவர்கள் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
