ஜெனிவாவில் தாயக உறவுகள் உணவு ஒறுப்பு போராட்டம்! ஆறாவது நாளை கடந்தது..
srilanka
protest
geneva
info
human-rights
By Vasanth
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரின் பின்னணியில் புலம் பெயர் நாடுகளிலும் அறவழி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை உட்பட்ட கோரிக்கைகளை முன் நிறுத்தி ஜெனிவா ஐ.நா மனித உரிமை பேரவை முன்றலில் தாயக செயற்பாட்டாளர்கள் நடத்திவரும் உண்ணா நிலைப்போராட்டம் இன்று ஆறாவது நாளை கடந்திருந்தது
நாளை மறுதினம் மார்ச் முதலாம் திகதி பிற்பகல் இரண்டு மணிக்கு ஜெனிவா ஐ.நா மனித உரிமை பேரவை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ள நிலையில் இந்த உண்ணா நிலைப்போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
