இலங்கைக்கு எதிரான தீர்மானம் - இந்தியாவின் ஆதரவைபெறும் தீவிர முயற்சியில் பிரிட்டன்
srilanka
india
meeting
geneva
By Vasanth
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கான தீவிர முயற்சிகளை பிரிட்டன் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் அமைச்சர் தாரிக் அஹமட் இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சரையும் செயலாளரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது இலங்கை விவகாரம் குறித்தும் ஆராயப்பட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.