பௌத்த விகாரை நிர்மாணிப்பிற்கு ஆதரவாக களத்தில் குதித்த அருட்தந்தை ஜோர்ஜ்
திருகோணமலை பௌத்த விகாரை நிர்மாணிப்பிற்கு ஆதரவாக அருட்தந்தை ஜோர்ஜ் களத்தில் குதித்துள்ளார்.
40 வருடங்கள் திருகோணமலையில் வாழ்ந்தவனாகவும், மதத் தலைவராக முப்பது வருடங்கள் திருகோணமலையில் சமாதானத்திற்காக சேவை செய்த தாம் தொடர்ந்தும் இதேபோன்று செயற்பட உள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ கிழக்கு ஆளுநர் தடை உத்தரவைப் பிறப்பித்து திருகோணமலை மாவட்டத்திலிருந்த சமாதானத்தை அமைதியை, சமாதானத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு எமது கடுமை எதிர்ப்பினை வெளியிடுகிறோம்.
திருகோணமலை மாவட்டத்தில் தேரர்கள் உயிர்த்தியாகம் செய்து, யுத்த காலத்தில் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளனர். அவர்களது உடலில் இன்னும் துப்பாக்கி காயங்கள், தழும்புகள் கூட உள்ளது.
இந்த நிலையில் அவர்களுடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க இந்த இடத்தில் ஒன்று சேர்ந்து தேரர்கள் வந்தமை பெரும் மகிழ்ச்சி.
எனக்கும் ஒரு கடமை இருக்கிறது. குருசகந்த ஆர்ப்பாட்டத்தின் போது எமக்குத் தேரர்கள் மாத்திரம் தான் முழு ஆதரவினையும் வழங்கினார்கள்.
அதனால் நான் என்னுடைய ஆதரவை அவர்களுக்கு வழங்குகிறேன். யார் என்ன சொன்னாலும், என்ன நிலையில் இருந்தாலும் எனக்கு என்று கருத்துச் சுதந்திரம் இருக்கிறது”