2 ஆம் உலகப்போரில் ஜெர்மனியில் புதையுண்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு - பிரதேசவாசிகள் வெளியேறும் நிலை
19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரையான காலப்பகுதியில் உலகினை உலுக்கிய இரண்டாம் உலக போர் இடம்பெற்றது.
இந்தப் போர்க்காலத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் சுமார் 2.7 மில்லியன் தொன் வெடிகுண்டுகளை ஜெர்மனி கூட்டணி நாடுகள் மீது வீசியது.
அதில் அதிகளவானவை ஜெர்மனி மீது வீசப்பட்டன, இவற்றில் பல வெடித்த நிலையில் ஒரு சில வெடிகுண்டுகள் வெடிக்காமல் பூமியில் புதைந்தன.
போர் முடியும் வேளையில் ஜெர்மனியின் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டது.
தகவல்கள் வெளியாவது
அந்நாட்டில் இதனால் பல வெடிகுண்டுகள் பூமிக்கு அடியில் வெடிக்காமல் புதையுண்டு போனது.
பல தசாப்தங்கள் கடந்த பிறகும் ஆங்காங்கே அவற்றில் சில கண்டெடுக்கப்பட்டதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாவது வழக்கம்.
அந்த வகையில் அண்மையில் ஜெர்மனியின் மேற்கு பகுதி நகரமான டஸ்ஸல்டார்ஃப் (Dusseldorf) பகுதியில் உள்ள ஒரு மிருககாட்சி சாலையில் இம்மாதம் முதல் வாரத்தில் 1 தொன் நிறையுடைய ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து காவல்துறையும், வெடிகுண்டு நிபுணர்களும் இணைந்து அதனை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை திட்டமிட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, அந்த குண்டு இருப்பதாக சொல்லப்படும் இடத்தினைச் சுற்றி சுமார் 1640 சதுர அடி சுற்றளவில் (500 meter radius) உள்ள இடங்களில் உள்ள அனைத்து மக்களையும் வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இடத்தை விட்டு வெளியேறினர்
இதனால் சுமார் 13 ஆயிரம் பேர் தற்காலிகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.
இந்த நடவடிக்கையின்போது அந்த இடத்தை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டது.
மீட்பு பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நடவடிக்கை எப்போது முடிவடையும் என்பதும் தற்காலிக தடை நீக்கப்பட்டதா? என்பது குறித்தும் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.