ஜர்மனியை உலுக்கிய விபத்து: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மக்களுக்கு நேர்ந்த துயரம்
ஜர்மனியில் ஒரு கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவரவில்லை, எனினும் 50 முதல் 70 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்று அவசர சேவைகளை மேற்கோள் காட்டி ஜெர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தேகநபர் கைது
இதன்போது, கிறிஸ்துமஸ் சந்தையில் இருந்த மக்கள் கூட்டத்தின் ஊடாக அதிவேகமாக கறுப்பு நிற BMW கார் ஒன்று டவுன் ஹால் திசையை நோக்கிச் சென்றுள்ளது.
அதனை தொடர்ந்து, விரைந்து செயற்பட்ட அதிகாரிகள் அந்த பயங்கர விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியை கைது செய்துள்ளனர்.
பயங்கரவாத தாக்குதல்
கிழக்கு ஜேர்மனிய நகரமான Magdeburg இல் நடைபெற்ற இந்த சம்பவமானது, ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், குறித்த சந்தேகநபர் ஒரு சவுதி குடிமகன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தாக்குதல் இடம்பெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் காரை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள் காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |