சிறிலங்கன் விமானத்தில் வந்த பரிசுப்பொதி : சுங்க அதிகாரிகள் வசம் சிக்கிய பொருட்கள்
தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பரிசுப்பொதி என வந்தடைந்த உலோகக் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.6 கிலோவுக்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான ஹஷிஸ் போதைப்பொருளை இலங்கை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இந்த பொதி,சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL405 மூலம் ஜூலை 24, 2026 அன்று வந்தடைந்ததுடன், ஒரு பரிசுப் பொதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
போதைப்பொருட்கள் அடங்கிய பொலித்தீன் பொட்டலங்கள்
சுங்க அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரின் முன்னிலையில், ஜூலை 31 அன்று பொதியை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது, உலோகக் கொள்கலன்களுக்குள் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்கள் அடங்கிய பொலித்தீன் பொட்டலங்களை அவர்கள் கண்டுபிடித்தனர்.

இறுதிப் பட்டியலில், கஞ்சா, ஹஷிஷ் மற்றும் ஹஷிஷ் எண்ணெய் உள்ளிட்ட 10.608 கிலோ (பொதிகள் உட்பட) கஞ்சா தொடர்பான போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ. 106.08 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |