பச்சிளம் பிஞ்சுவுக்கு எமனான போத்தல்மூடி
Sri Lanka Police Investigation
Death
By Sumithiran
போத்தல் மூடி ஒன்று தொண்டையில் சிக்கியதால் பச்சிளம் பிஞ்சு ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
அக்குரஸ்ஸ தலஹகம பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒரு வருடமும் 15 நாட்களுமே ஆன பெண் குழந்தையொன்றே உயிரிழந்தது.
வாயில் போத்தல் மூடி

குழந்தை வாயில் போத்தல் மூடியை வைத்திருந்தபோது அது தவறுதலாக தொண்டையில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.உடனடியாக சகோதரர் மூடியை அகற்ற முயன்றபோதிலும் அவரது முயற்சி வெற்றியளிக்கவில்லை.
பின்னர் சிகிச்சைக்காக கம்புறுபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி