பேருந்தில் வைத்து பெண்ணின் தலைமுடியை வெட்டிய மௌலவி : காவல்துறையினர் நடவடிக்கை
பேருந்தில் பயணித்த 27 வயதுடைய பெண்ணின் தலை முடியை வெட்டியதாக கூறப்படும் முருதலாவ பிரதேச பள்ளியொன்றின் மௌலவி என கூறப்படும் நபரை கண்டி தலைமையக காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் முர்தலாவ தெஹியங்க வடக்கு பகுதியைச் சேர்ந்தவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தில் குறித்த பெண் அமர்ந்திருந்த ஆசனத்தின் பின் இருக்கையில் அமர்ந்த நபர் பெண்ணின் தலைமுடியை வெட்டியுள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்ணின் தலை முடி
அதேநேரம் சம்பவத்தை எதிர்கொண்ட யுவதி, சந்தேகநபரையும் அவர் வெட்டிய தலைமுடியின் பகுதியையும் தனது கையடக்கத் தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
மடவளை பிரதேசத்தில் வசிக்கும் யுவதி சில தேவைகளுக்காக கண்டி நோக்கி பயணித்த வேளையில் இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர் அறிவித்ததன் பிரகாரம் பேருந்து பயணிகள் சந்தேக நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |