வரலாற்றில் முதல் முறையாக தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்
வரலாற்றில் முதல் முறையாக நேற்றைய தினம் (14) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,000 டொலர்களை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வரிகள் மற்றும் புவிசார் அரசியல் குறித்து முதலீட்டாளர்கள் கவலைப்படுவதால், பாதுகாப்பான புகலிட சொத்துக்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிகள்
இதற்கிடையில், இங்கிலாந்தின் ஈவ்லின் பார்ட்னர்ஸின் (Evelyn Partners) நிர்வாக இயக்குனர் ஜேசன் ஹோலண்ட்ஸ், தங்கத்தின் விலை அதிகரிப்பை, "தேர்வுக்கான பீதி சொத்து" என்று விபரித்துள்ளார்.
அத்துடன், இந்த விலை உயர்வு ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிகள் மற்றும் தொடர்புடைய பழிவாங்கும் நடவடிக்கைகளால், உலகளாவிய வர்த்தக அமைப்பு எதிர்கொள்ளும் தீவிர நிச்சயமற்ற தன்மையை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் நேற்றைய தினம் (14) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 883,842 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்