வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
இலங்கையர்களுக்கு தொழில் விசாக்களை வழங்குவதற்கு இத்தாலி (Italy) அரசாங்கம் மீண்டும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வௌயாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (15) நடைபெற்ற பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு இத்தாலி அரசாங்கம் விசா வழங்குவதை நிறுத்தியிருந்தது.
இத்தாலியின் விசா தடை
இத்தாலியின் விசா தடையானது இலங்கைக்குப் பிரச்சினையாக இருந்த நிலையில் கடந்த 4 ஆம் திகதி இத்தாலி அரசாங்கம் விசா தடையை நீக்கியதாக விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இப்போது இத்தாலிய அரசாங்கம் எங்களுக்கு விசா வசதிகளை வழங்குகிறது.
தொழில் விசாக்களை வழங்கும்போது சாரதி அனுமதிப்பத்திரங்கள் தேவைப்படுகின்றன. நாம் வழங்கும் ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தில் பல தொழிநுட்ப வேறுபாடுகள் காணப்படுவதாகக் கடந்த 11ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
சாரதி அனுமதிப்பத்திரம்
சுமார் ஐந்து வகையான சாரதி அனுமதிப்பத்திரங்கள் காணப்படுவதால் இத்தாலி அரசாங்கத்தால் இவற்றை அடையாளம் காணுவதில் சிக்கல்கள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே இந்த ஐந்தையும் ஒரே முறையில் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி இணக்கம் தெரிவித்துள்ளோம். இது தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.13ஆம் திகதி அமைச்சரவைக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளோம்.
மேலும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்துக்கும் (Department of Motor Traffic) தகவல் தெரிவித்துள்ளோம்.“ என விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்