மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்
அஸ்வெசும பயனாளிகளான முதியவர்களுக்கான கொடுப்பனவு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பை இன்றையதினம் (15.03.2025) தேசிய முதியோர் செயலகம் (National Secretariat for Elders) விடுத்துள்ளது.
இதன்படி, அஸ்வெசும திட்டம் மூலம் ஏழ்மையான குடும்பங்களில் இதுவரை உதவித்தொகை பெற்று வந்த முதியவர்களுக்கு இம்மாதம் 20 ஆம் திகதி 3,000 ரூபா வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்குகளில் நேரடியாக வரவு
வங்கி கணக்குகளில் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் மூலம் குறித்த பணத்தைப் பெற முடியும் என்று தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், நலன்புரி நன்மைகள் சபை, இலங்கை வங்கிகளுக்கு இடையேயான கொடுப்பனவு முறை (SLIPS) தொடர்பான அமைப்பின் மூலம் நலன்புரி குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட நபர்களின் கணக்குகளில் நேரடியாக உதவித்தொகைகளை வரவு வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்
2026 ஆம் ஆண்டில் இலவச பாடசாலை சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் வழங்கும் ரூ.6,000 மதிப்புள்ள வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நேற்றையதினத்திலிருந்து எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்