சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு
இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும், தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்கள் இன்னும் கிடைக்காத பரீட்சார்த்திகள் இன்று (15) அந்தக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் (Department for Registration of Persons) தெரிவித்துள்ளது.
அதன்படி, தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மட்டுமே இன்று காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அலுவலகம் திறந்திருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
இதற்காக, பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மாகாண அலுவலகங்கள் பிற்பகல் 12.30 மணி வரை திறந்திருக்கும்.
இதற்கிடையில், ஆட்பதிவுத் திணைக்களத்தின் http://www.drp.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் தொடர்புடைய கடிதத்தை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளதாகவும் ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு
பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் வழங்கும் ரூ.6,000 மதிப்புள்ள வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எழுதுபொருள் வாங்குவதற்காக அரசாங்கம் வழங்கும் இந்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நாளை (15) காலாவதியாக போவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் (மார்ச்) 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று (14) வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 6 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்