சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!

Israel Iran World
By Shalini Balachandran Apr 10, 2026 03:54 AM GMT
Report

ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாலும் அமெரிக்கா - ஈரான் இடையிலான பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி வருவதாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10, 2026) அதிகாலை நிலவரப்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) ஒரு பேரல் 0.87 சதவீதம் உயர்ந்து 96.75 டொலராக வர்த்தகமானது.

அதேவேளை, அமெரிக்க கச்சா எண்ணெய் எதிர்கால விலையும் 1 சதவீதத்திற்கும் மேலான விலை அதிகரிப்பைக் கண்டுள்ளது.

அற்பமான எப்ஸ்டீனுடன் தொடர்பு...! ட்ரம்ப்பின் மனைவி வாக்குமூலம்

அற்பமான எப்ஸ்டீனுடன் தொடர்பு...! ட்ரம்ப்பின் மனைவி வாக்குமூலம்

எண்ணெய் போக்குவரத்து

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களை அனுமதிப்பதில் ஈரான் மெத்தனமாகச் செயல்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளதுடன், அங்கு செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் ஈரானின் முயற்சிக்கு எதிராகக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், ஈரானின் முந்தைய தாக்குதல்களால் சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தித் திறன் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அதன் தினசரி உற்பத்தி சுமார் 6,00,000 பேரல்களாகக் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு! | Global Oil Price Hike Brent Crude Iran Israel

அத்துடன், சவூதியின் கிழக்கு - மேற்கு குழாய்த்திட்டத்தின் விநியோகம் ஒரு நாளைக்கு 7,00,000 பேரல்களாகச் சரிந்துள்ளதாகச் சவூதி செய்தி நிறுவனம் (SPA) உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் எட்டப்பட்டிருந்தாலும் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் இந்த அமைதி முயற்சியைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளன.

இத்தகைய பிராந்தியப் போர்ச் சூழல் மற்றும் விநியோகத் தடைகள் முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலையைத் தொடர்ந்து ஏற்றத்தில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறிமலை பௌத்தருக்குரியது - விரைவில் வர்த்தமானி..! அமைச்சரின் அறிவிப்பு

வெடுக்குநாறிமலை பௌத்தருக்குரியது - விரைவில் வர்த்தமானி..! அமைச்சரின் அறிவிப்பு

யாழில் மாணவனின் ஆடைகளை களைந்து காணொளி பதிவு செய்து தாக்குதல்

யாழில் மாணவனின் ஆடைகளை களைந்து காணொளி பதிவு செய்து தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016