பேசுவதற்கு ஒருநிமிடமேனும் வாய்ப்பளியுங்கள்! உரத்த குரலில் முழக்கமிட்ட ஞானசார தேரர்

Sri Lanka Magistrate Court Galagoda Aththe Gnanasara Thero
By Aanadhi Oct 05, 2026 01:05 PM GMT
Report

தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அதனுடன் தொடர்புடைய விபரங்கள் குறித்து கருத்து வெளியிட ஒரு நிமிட அவகாசம் கோரிய ஞானசார தேரரின் கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தைக் கழிப்பதற்காக சிறைச்சாலைக் காவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட முன்னர் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

எனினும் அவரது கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ஏகமனதாக நிராகரித்துள்ளது.  

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை

அத்துடன் அவரது சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தைக் கழிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேசுவதற்கு ஒருநிமிடமேனும் வாய்ப்பளியுங்கள்! உரத்த குரலில் முழக்கமிட்ட ஞானசார தேரர் | Gnanasara Thero Pleaded In Court

இந்நிலையில்,  தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை இந்நாட்டின் பௌத்த பிக்குகளுக்கு நல்லதொரு பாடமாகும் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் உரத்த குரலில் விமர்சித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில், தன் மீதான சிறைத் தண்டனை குறித்து கலகொடஅத்தே ஞானசார தேரர் காரசாரமானக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் சென்ற ஷிராந்திக்கு இறுதி அறிவிப்பு

சிங்கப்பூர் சென்ற ஷிராந்திக்கு இறுதி அறிவிப்பு

எவருக்கும் பயமுமில்லை

உரத்த குரலில் முழக்கம் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்ட போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், 'நாட்டிலுள்ள பௌத்த பிக்குகள் இதையொரு நல்ல பாடமாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பேசுவதற்கு ஒருநிமிடமேனும் வாய்ப்பளியுங்கள்! உரத்த குரலில் முழக்கமிட்ட ஞானசார தேரர் | Gnanasara Thero Pleaded In Court

நான் நாட்டின் நன்மைக்காகவே இந்தச் தியாகங்களைச் செய்தேன்.என்னைச் சிறையில் அடைத்துவிட்டால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடுமா?உண்மையைப் பேசுவதற்கு நாம் பயப்பட வேண்டுமா?

நாங்கள் பிறரின் அன்னதானத்தை உண்டு நாட்டின் நலனுக்காகவே இந்தத் தியாகங்களைச் செய்தோம்.நாங்கள் யாருக்கும் கடனுமில்லை, எவருக்கும் பயமுமில்லை' என்று உரத்த குரலில் முழங்கியுள்ளார்.

அதனையடுத்து சிறைச்சாலை வாகனத்தில் அவர் வெலிக்கடை சிறைச்சாலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் அழைத்துச் செல்லப்பட்ட வாகனத்துக்கு விசேட அதிரடிப்படையின் வாகனப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026