தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை வீட்டுக்கு அனுப்ப திட்டம்
முன்னாள் ஆயுதக் குழுவும் தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் கிழக்கில் இருந்து ( TMVP) வீட்டுக்கு அனுப்புவோம் என்ற போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட உள்ள போராட்டத்திற்கான ஆரம்ப கட்ட வேலையாக #Go Home Tmvp# என்ற சமூக வலைத்தளப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதக் குழுவாக செயற்பட்டு கொலை,கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் வளர்ப்பு பிள்ளையான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்பாடுகள் இன்று வரை ஜனநாயக வழிக்கு திரும்பாத நிலையில் அவர்களின் செயற்பாடுகள் கிழக்கில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் உள்ளதால் ராஜபக்ச குடும்பத்துடன் சேர்த்து அவர்களையும் வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜபக்ச அரசின் இரகசிய ஆயுதக் குழுவாக செயற்பட்ட பிள்ளையான் ஆயுதக் குழுவே பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக செயற்பட வைக்க வேண்டும் என்ற நோக்கில் அதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்ற அரசியல் அடையாளத்திற்குள் கொண்டு வந்தனர்.
வடகிழக்கில் ராஜபக்ச அரசாங்கத்தின் முகவர்களாக செயற்பட்டு வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் (TMVP) பொதுமக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும்
எனவே இந்த போராட்டங்களில் தமிழ் மக்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஜனநாயக பதிவுகளை முன்வைத்து போராடுவதற்கு முன்வருமாறு தமிழ் சிங்கள பல்கலைகழக மாணவர்கள் முன்வர வேண்டும் என பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
