நாளுக்கு நாள் குறைவடையும் தங்க விலை : இன்றைய நிலவரம்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
அந்தவகையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது நேற்று சடுதியாக குறைவடந்த நிலையில் இன்றும் குறைவடைந்துள்ளது.
இன்றைய (29.05.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 980,523 ரூபாவாக காணப்படுகின்றது.
இன்றைய நிலவரம்
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 34,590 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 276,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 31,710 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 253,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 30,270 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 242,150 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
