உலக சந்தையில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்
உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (21) கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச் சூழல் காரணமாக இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,550.06 டொலராக விற்பனை செய்யப்படுகிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெள்ளியின் விலை
அத்துடன், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 76.29 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.
எனினும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு காரணமாக, இன்று இலங்கையின் உள்நாட்டு சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |