தங்க நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர் நீடிக்கும் நிலையில் இன்று (21) சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,494 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,000 டொலர்களுக்கு மேல் விறபனையாகியிருந்த நிலையில், இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளியின் விலை வீழ்ச்சி
அத்துடன் வெள்ளியின் விலையும் வீழ்ச்சியடைந்து, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 68.02 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.

இது, நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் சுமார் 2.23 சதவீத வரையிலான வீழ்ச்சி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதி சர்வதேச சந்தையில் வலுவடைந்து வருவது மற்றும் பணவீக்கம் காரணமாக தங்கத்தின் விலையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உள்நாட்டுச் சந்தையிலும், இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |