யாழில் விபத்து : முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சாவகச்சேரி, கனகம்புளியடி - புத்தூர் வீதியில் இன்று(21) காலை 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
புத்தூரிலிருந்து மீசாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
காவல்துறையினர் விசாரணை
இந்த விபத்தின் போது முச்சக்கர வண்டியில் நால்வர் பயணித்த நிலையில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் முச்சக்கர வண்டியின் சாரதியும், அதில் பயணித்த மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விபத்து குறித்து சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
