வரலாற்றில் முதன் முறையாக நான்கு இலட்சத்தை நெருங்கிய தங்க விலை
புதிய இணைப்பு
கொழும்பு - செட்டியார் தெரு நிலவரப்படி இன்று தங்கத்தின் விலையானது 4 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது அதிக விலை வரம்பை கொண்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 390000 ஆக காணப்பட்ட தங்க விலையானது தங்போது 395000 ரூபாய்க்கும் அதிக விலையில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு - செட்டியார் தெரு நிலவரப்படி இன்று மாலைக்குள் தங்கத்தின் விலையானது 4 இலட்சத்தை அடையும் என நம்பப்படுகிறது.
சர்வதேசத்தில், தங்கத்தின் விலை உயர்வடையும் நிலையில், அதன் தாக்கம் இலங்கையிலும் பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்றைய (16.10.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,283,485 ரூபாயாக காணப்படுகின்றது.
இன்றைய நிலவரம்
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 45,280 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 362,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 41,510 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 332,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 39,620 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) இன்றையதினம் 317,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
