யாழில் 06 கிலோ தங்கத்துடன் இருவர் அதிரடி கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட தங்க கட்டிகள்
இதன்போது குறித்த படகில் இருந்து 6 கிலோ 85 கிராம் தங்க கட்டிகளை மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து படகில் இருந்த சந்தேக நபர்கள் இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் , மீட்கப்பட்ட தங்கத்தையும் தங்கத்தை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட படகினையும் மேலதிக நடவடிக்கைக்காக காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |