அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட விசித்திர தங்க உருண்டை
அமெரிக்காவில் ஒரு விசித்திரமான தங்க நிற உருண்டையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தங்க உருண்டை, அலாஸ்கா கடற்கரைக்கு அப்பால் கடலுக்கு அடியில் சுமார் 3,300 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பத்து சென்டிமீட்டர் அகலமுள்ள அந்தத் தங்க உருண்டையின் ஒரு பக்கத்தில் ஒரு சிறிய துளையும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆய்வு நடவடிக்கை
அமெரிக்காவின் NOAA அமைப்பு அனுப்பிய ரிமோட்லி ஆப்பரேட்டட் வெஹிக்கிள் (ROV) எனப்படும் ஆழ்கடல் ரோபோவின் கேமராக்களில்தான் இந்த உருண்டை முதலில் பதிவாகியுள்ளது.
அதன் இயந்திரக் கைகளால் மெதுவாகத் தொட்டுப் பார்த்தபோது அது கல் போல கடினமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மெதுவாக அமுங்கும் தன்மையுடன் மென்மையாக இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில். அந்த உருண்டை ஆய்வு கூடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |