கனடாவில் தற்காலிகமாக தங்கியுள்ளோருக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம்
Immigration
Canada
By Sumithiran
கனடாவில் பல்வேறு நாடுகளையும் நேர்ந்தவர்கள் கல்வி, தொழில் என் ரீதியில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
இவ்வாறு தற்காலிகமாக வதிவோருக்கு நிரந்தர வதிவிட உரிமைக்கான கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
தற்காலிகமாக வதியும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு
ஏற்கனவே கனடாவில் தற்காலிகமாக வதியும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்கும் போது கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணிகளின் அடிப்படையில்
தொழில் தகமை, பிரெஞ்சு மொழித் திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தற்காலிகமாக வதிவோருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
தொழில் மற்றும் கல்வி நோக்கில் கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு துரித கதியில் நிரந்தர வதிவுரிமை கோரிக்கை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்