சுற்றுலா பயணியால் விபரீதம் : அவுஸ்திரேலியாவில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அவுஸ்திரேலியாவின் தலைநகரான மெல்பேனில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்கிழக்கு மெல்பேனில் உள்ள மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
மேலும் குறித்த சுற்றுலாப் பயணி அப்பகுதியில் 18 இடங்களுக்குச் சென்று மார்ச் 14 முதல் 19 வரை நாட்டில் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
தடுப்பூசி
தட்டம்மை என்பது அவுஸ்திரேலியாவில் ஒரு அரிய நோயாக இருப்பதனால் இந்த நாட்களில் வெளிநாடு செல்ல திட்டமிட்டால் தட்டம்மை, சளி, ரூபெல்லா தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அம்மை நோய் மிக விரைவாக பரவும் அபாயம் உள்ளதால், மக்கள் இது குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகும்.
தட்டம்மை நோய்த்தொற்றைத் தடுக்க, அம்மை நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் 72 மணி நேரத்திற்குள் MMR தடுப்பூசியைப் பெற பரிந்துரைக்கப்படுகிறது.
விக்டோரியாவின் தலைமை சுகாதார அதிகாரி, பேராசிரியர் பென் கோவி, தட்டம்மை அறிகுறிகளுடன் கூடிய எவரும் விரைவில் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |