சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை
கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டை விலையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
குறித்த விடயத்தை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் பல பகுதிகளில் வெள்ளை முட்டை 28 ரூபாய்க்கும் சிவப்பு நிற முட்டை 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தேங்காய்களின் சராசரி விலை
இதேவேளை, வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், இலங்கையின் சராசரி தேங்காய் விலை 6.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை (Coconut Development Authority - CDA) தெரிவித்துள்ளது.
இதன்படி, ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை138,582 ரூபாயாக பதிவாகியுள்ளது.
உள்நாட்டு சந்தையில் பெரிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 180 முதல் 190 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அத்துடன் சிறிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 150 முதல் 170 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
