விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபா பணம்: வெளியான மகிழ்ச்சி தகவல்
வெள்ளத்தினால் ஏற்பட்ட மொத்த பயிர் சேதத்திற்காக விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 100,000 ரூபா நட்டஈடு வழங்க முடியும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) தெரிவித்துள்ளார்.
இதற்கான சுற்றறிக்கை நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் விவசாயிகள் இதில் சந்தேகம் கொள்ள வேண்டாம் எனவும் பிரதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு உரிய மதிப்பீட்டுத் தொகையும், பகுதி சேதத்திற்கு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 60% இழப்பீட்டுத் தொகையும், அடிப்படை சேதத்திற்கு 40% இழப்பீட்டுத் தொகையும் பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பயிர் சேத மதிப்பீடு
சேதமடைந்த ஒரு ஹெக்டேர் நெற்பயிர் செய்கைக்கு 40,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் பயிர் சேத மதிப்பீடு முடிந்தவுடன், குறித்த இழப்பீடுகள் உடனடியாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
அத்தோடு, அழிவடைந்த பயிர்களை மீள பயிரிடுவதற்காக விவசாயிகளுக்கு இலவச பயிர் விதைகள் வழங்கும் முறைமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ப
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |