தேங்காய் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் ...! மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை
நாட்டில் ஓகஸ்ட் மாதத்தில் நெல் மற்றும் தென்னை உற்பத்தி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் மத்திய வங்கியின் (Central Bank of Sri Lanka) செப்டம்பர் மாதத்துக்கான விவசாய துறை தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, தேயிலை, இறப்பர், மீன் உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தென்னை உற்பத்தி
2024 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு தேங்காயின் சில்லறை விலை 160 லிருந்து 200 ரூபாயாக உயர்ந்துள்ளதுடன் நாட்டு மக்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.
தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில் ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதத்தில் தென்னை உற்பத்தி, 17.8 சதவீதம் அதிகரிப்பை பதிவு செய்து, நிலையான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
வீழ்ச்சியை பதிவு
மத்திய வங்கி தரவுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டின் சிறுபோக பருவத்தில் நெல் உற்பத்தி 2.21 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், 2025 ஆம் ஆண்டுக்கான மொத்த நெல் உற்பத்தி 4.96 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 ஆம் ஆண்டை விட 5.5 சதவீதம் அதிகமாகும்.
எவ்வாறாயினும், குறித்த மாதத்தில் தேயிலை உற்பத்தியானது 7.8 சதவீதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. எனினும், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான மொத்த உற்பத்தியில் ஒரு சிறிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது என்று மத்திய வங்கி கூறுகிறது.
அதேநேரம், இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் தற்காலிகத் தரவுகளின்படி, இறப்பர் உற்பத்தியும் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
