இத்தாலியில் வேலை செய்ய எதிர்பார்த்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
இத்தாலியில்(Italy) தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் இலங்கை இளைஞர்களின் விசா பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்கவுள்ளதாக இத்தாலிய தூதுவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம்(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டெமியானோ பிரான்கோவிக்கும் (Damiano Francovigh) இடையில் இன்று (27) இடம்பெற்ற சந்திப்பின் போதே இத்தாலிய தூதுவர் இதனை கூறியுள்ளார்.
அதேநேரம், இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையின் புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் திட்டத்திற்கு இத்தாலிய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று இத்தாலிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலியில் தொழில் வாய்ப்பு
இதன்போது, இலங்கையின் சுற்றுலா துறைமுகங்கள் மற்றும் முதலீட்டுத் துறைகளுக்கு இத்தாலிய அரசாங்கம் வழங்கக் கூடிய ஆதரவு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்களுக்கும், இத்தாலியில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கும் சட்டப்பூர்வமான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
