பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
Ministry of Education
Sri Lanka Cabinet
Sri Lankan Peoples
Harini Amarasuriya
Education
By Dilakshan
2026 ஆம் ஆண்டுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவேனாக்களில் உள்ள மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகளைப் பெறுவதற்காக, வவுச்சர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 பாடசாலை தவணை இறுதிக்குள் இந்த வவுச்சர்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் முன்மொழிவு
நலத்திட்ட சலுகைகளை வழங்குவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட தொலைப்பேசி மென்பொருள் மூலம் ஸ்கேன் செய்யக்கூடிய QR குறியீடு எண்ணுடன் வவுச்சர்கள் பாதுகாப்பாக அச்சிடப்பட்டு பயனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற முறையில் பிரதமர் ஹரிணி மேற்படி திட்டத்தின் கீழ் பின்வருமாறு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- நாடு முழுவதும் 250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடாசலைகளில் 644,000 மாணவர்கள்.
- 251-500 மாணவர்களைக் கொண்ட தோட்டப்புற பாடசாலைகளின் 53,093 மாணவர்கள்.
- சிறப்புத் தேவைகள் உள்ள 30 பாடாலைகளில் 2,300 மாணவர்கள்.
- பிரிவேனாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30,000 சாதாரண/துறவி மாணவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு குறித்த வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்