அமெரிக்காவுடன் நல்லுறவு - கோட்டாயய வகுத்த வியூகம்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின்(Gotabaya Rajapaksa) வேண்டுகோளுக்கு இணங்க இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும், அடுத்த சில தினங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க(Mahinda Samarasinghe) தெரிவித்துள்ளார்.
அவர் இம்மாதம் 29ஆம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளார். “எங்கள் மொத்த ஏற்றுமதியில் 25% அமெரிக்காவுக்கே செல்கின்றன.அவர்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும், எங்களுக்கு எதிராக அவர்கள் தீர்மானம் கொண்டுவந்தால் கதவை அடைப்பது நல்லதல்ல.
அமெரிக்க தூதுவராக பதவியேற்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறி 29 ஆம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளேன்.
குறிப்பாக ஒரு மாதத்திற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபைக்கான தேர்தலில் அமெரிக்கா அமோக வெற்றி பெற்று மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகித்தது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் திகதி அவர்கள் உறுப்பினர்களை ஏற்றுக்கொள்வார்கள்.
அரசுத் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க நான் நாட்டுக்கு சேவை செய்யப் போகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.