காற்று மாசுபடுதலை தடுக்க களமிறங்குகிறது கூகுள்...!
விண்வெளியில் இருந்து மெதேன் வாயுக்களை கண்காணிக்கும் பணியில் கூகுள் நிறுவனம் இணைந்துள்ளது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி நிறுவனத்துடன் உடன் சேர்ந்தே விண்வெளியில் இருந்து மெதேன் வாயு வெளியேறுவதை கண்காணிக்க கூகுள் நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இந்த புதுமையான திட்டம், கண்ணுக்குத் தெரியாத ஆனால் காபனீரொட்சைட் வாயுவை விட 25 மடங்கு அதிக வெப்பமயமாதல் தாக்கத்தை ஏற்படுத்தும் மெதேன் என்ற வாயுவை கண்காணிக்கிறது.
இந்த விண்வெளித் திட்டத்தின் முக்கிய கருவியாகவுள்ள MethaneSAT ஆனது உலகமெங்கும் உள்ள மெதேன் வாயுவின் அளவை துல்லியமாக கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளாக விளங்குகிறது.
துல்லியமாகக் கண்டறியும்
இது தேவையான தரவுகளை சேகரித்து, உலகளாவிய மெதேன் அளவுகளின் படத்தைக் காண்பித்து, அதிக அளவு மெதேன் வெளிப்படும் பகுதிகளை துல்லியமாகக் கண்டறியும்.
இந்த திட்டத்தில் கூகுள் நிறுவனம் நிதி உதவி மட்டுமல்லாமல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது நிபுணத்துவத்தையும் வழங்குகிறது, மேம்பட்ட முறைமைகளைப் பயன்படுத்தி, மெதேன் வாயு வெளியேற்றத்தின் விரிவான வரைபடத்தை உருவாக்கும், இந்த விரிவான வரைபடம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் எனவும் கூறப்படுகிறது.
விவசாயம் மற்றும் கழிவு அகற்றல் செயற்பாட்டின் போது அதிகமான மெதேன் வாயு உற்பத்தி செய்யப்படுகின்றன, ஆனால் கூகுள் நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆலைகளில் ஏற்படும் மெதேன் கசிவில் கவனம் செலுத்தும் என தெரியவந்துள்ளது.
காலநிலை மாற்றம்
இந்தத் திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் அதன் வெளிப்படைத்தன்மை. MethaneSAT சேகரிக்கும் தரவுகள் மற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவு மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகள் MethaneSAT வலைத்தளம் மற்றும் Google Earth Engine மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும்.
இது உலகமெங்கும் உள்ள மெதேனின் அளவை துல்லியமாக கண்காணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, செயற்கைக் கோளின் படங்கள் மூலம் அதிக அளவு மெதேன் வாயு வெளிப்படும் பகுதிகளை துல்லியமாகக் கண்டறியும்.
இந்தத் தரவுகள் பொதுமக்களுக்கு கிடைப்பதன் மூலம் மெதேன் கசிவுகளைக் குறைத்து காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடவும் இந்த திட்டம் உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |